நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குபவர்களுக்கு கடன் ஒப்புதல் வழங்க தேவைப்படும் குறிப்பிடத்தக்க அடையாளச் சான்றுகளில் PAN கார்டு ஒன்றாகும். ஒரு PAN கார்டு கடன் வாங்குபவரின் நிதி வரலாற்றை பிரதிபலிக்கிறது மற்றும் கடன் வழங்குபவர்களுக்கு அவர்களின் திரும்ப செலுத்தும் திறனைப் பற்றிய கருத்தை தருகிறது. ஒரு தனி நபருக்கான ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட கடன் எனும் போது, PAN கார்டு கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமாகும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோரை அறிய அதிகாரபூர்வ CIBIL இணையதளத்தை பார்வையிடவும். PAN கார்டு நம்பரை உள்ளிட்டு CIBIL ஸ்கோரை அறிவதற்கான உங்கள் வேண்டுகோளை சமர்ப்பிக்கவும். சுமார் 700லிருந்து 750 வரையும் அதன் மேலேயும் பெறுவது உங்கள் PAN கார்ட் கடனுக்கான தகுதி பெற்றிருப்பதை உறுதி செய்கிறது. PAN கார்ட் இல்லாத பட்சத்தில், விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட விவரங்களுடன் மற்ற KYC ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு வேளை நீங்கள் கடன் வழங்குபவருடன் பல வருடங்களாக விசுவாசமான உறவை பகிர்ந்து கொண்டிருந்தால், கடன் வாங்குபவர்கள் எந்த ஆவணங்களும் இன்றி முன் ஒப்புதல் பெற்ற கடன்களின் நன்மைகளைப் பெறலாம்.உங்கள் ஆதார் மற்றும் PAN கார்டு பிரத்தியேக எண் இணைக்கப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட KYC விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் சிறிய கடன்களை அங்கீகரிக்கலாம்.
ரூ. 50,000 லிருந்து ரூ. 1,50,000 வரையான ஒரு விரைவு தனி நபர் கடனைப் பெற ஹீரோஃபின்கார்ப் இன்ஸ்டண்ட் லோன் app முயற்சி செய்து பாருங்கள். இது இந்தியாவின் ஒரு நம்பகமான நிதி நிறுவனமான ஹீரோஃபின்கார்ப்-ஆல் தொடங்கப்பட்ட ஒரு நம்பகமான ஆன்லைன் கடன் தளம். ரூ. 50,000 மற்றும் அதற்கு மேலான தனி நபர் கடனை பெறுவதற்குரிய தகுதி வரம்பை பார்ப்போம்:
தனி நபர் கடன் வரம்பில் கடன் வாங்குபவரின் மாத வருமானம் குறிப்பிடத் தகுந்தது. தனி நபர் கடன்களுக்கு தனிநபர் கடன் வழங்குபவர்கள் வெவ்வேறு வரம்புகள் அல்லது அளவுகோல்களை நிர்ணயித்துள்ளனர். ரூ. 50,000-க்கான ஒரு தனிநபர் கடன் விண்ணப்பத்துக்கு, கீழ்க்காணும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
- இந்திய குடியுரிமை சான்று
- வருமான சான்றாக ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கை மற்றும் சம்பளச்சீட்டு
- விண்ணப்பதாரரின் வயது வரம்புத் தகுதி 21-58 வயதிற்குள்
- நீங்கள் மாதத்திற்கு குறைந்தது ரூ.15,000 சம்பாதிக்கும் சம்பளம் வாங்கும் ஊழியராகவோ அல்லது சுய-தொழில் செய்பவராகவோ இருக்க வேண்டும்.
- நீங்கள் தனியார் அல்லது பொதுத்துறையில் வேலை செய்பவராக இருக்க வேண்டும்
- உங்கள் நிதி வரலாறு கடன் வழங்குபரால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை பூர்த்தி செய்ய வேண்டும். வெவ்வேறு கடன் வழங்குபவர்கள் வெவ்வேறு அளவுகளை(பார்களை) தங்கள் தரநிலைகளின்படி நிர்ணயிப்பதால் கிரெடிட் ஸ்கோர் மாறுபடலாம்
ரூ. 50,000 அல்லது அதற்கு மேலான தனிநபர் கடனுக்கு தகுதி அளவுகோல்களுடன் கட்டாயத் தேவையான ஒரு ஆவணங்களின் தொகுப்பு
- நிலையான KYC ஆவணங்கள் – ஆதார் அட்டை/ஸ்மார்ட் அட்டை/ஓட்டுநர் உரிமம்/PAN அட்டை
- வருமான சான்றிதழ்கள் – சம்பளம் வாங்கும் நபர்களுக்கு சமீபத்திய சம்பள சீட்டுகள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு வங்கி அறிக்கை
ரூ. 50,000 தனி நபர் கடனை நாடுவதை தவிர, இது போன்ற கீழ்க் காணும் சமயங்களிலும் PAN கார்டு ஒரு கட்டாயமான ஆவணமாகும்
- ஒரு புதிய டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது
- ஒரு புதிய வங்கிக் கணக்கு/டீ மேட் கணக்கு துவங்க
- ரூ.50,000-த்திற்கு மேல் ரொக்கத் தொகை வைப்பு அல்லது ரொக்கத்தொகை செலுத்துதல்
- மியூச்சுவல் ஃபண்ட்கள், பாண்ட்கள், மற்றவற்றை வாங்குவதில் ஈடுபடும்போது
- ரூ. 50,000 அல்லது அதற்கும் மேல் நிலையான வைப்புகளில் செலுத்த
- ரூ.50,000 அல்லது அதற்கும் அதிகமான காப்பீட்டு பிரீமியம் செலுத்த
உங்கள் PAN கார்டு ஒரு நிலையற்ற நிதி நிலையைப் பிரதிபலிக்கும் பட்சத்தில், தனி நபர் கடன் வழங்குபவர்கள் பாதுகாப்பு கருதியும், பணம் செலுத்த தவறுபவர்களை தவிர்க்கவும், உங்கள் கடனுக்கு எதிரான இணையை கேட்கலாம். PAN கார்டை தொலைத்து விட்டு அதன் பின்பும் ரூ. 50,000-த்திற்கான தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அவர்களது ஆதார் அட்டையை உபயோகிக்கலாம்.